தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அவிநாசியில் ஒருங்கிணைந்த போலீஸ் வளாகம் அமையுமா?

 அவிநாசியில் ஒருங்கிணைந்த போலீஸ் வளாகம் அமையுமா?

 அவிநாசியில் ஒருங்கிணைந்த போலீஸ் வளாகம் அமையுமா?


ADDED : ஜூலை 09, 2026 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 11:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம்- ஒழுங்கு, கிரைம், போக்குவரத்து மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் பிரிவுகள் ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வருவதால் கடும் இடநெருக்கடி நிலவுகிறது. மாற்று இடத்தில் விரிவுபடுத்தப்பட்ட ஒருங்கிணைந்த புதிய போலீஸ் வளாகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

திருப்பூர் மாநகரை ஒட்டிய வேகமாக வளர்ந்து வரும் நகரமான அவிநாசியில், பின்னலாடை மற்றும் ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை நகரை ஒட்டிச் செல்வதால் போக்குவரத்து நெரிசலும், சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருகை அதிகரித்ததால், மக்கள் தொகையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நகர் வளர்ச்சிக்கேற்றவாறு, வழிப்பறி, செயின் பறிப்பு, திருட்டு, அடிதடி, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளும் அதிகரித்துள்ளது.

பல ஆண்டுகளாக சட்டம்- ஒழுங்கு, கிரைம், போக்குவரத்து மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் பிரிவுகள் ஒரே கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதனால், புகார் அளிக்க வரும் பொதுமக்கள் குழப்பமடைவதுடன், போலீசாருக்கும் பணிச்சுமை மற்றும் இடப்பற்றாக்குறை பிரச்னை ஏற்படுகிறது. பெண் போலீசாருக்கான தனி ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை.

மேலும், போலீஸ் வாகனங்கள் மற்றும் விபத்துகளில் சிக்கிய வாகனங்களை நிறுத்துவதற்கும் போதிய இடவசதி இல்லாததால், சாலையோரங்களில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு தீர்வு காண அவிநாசியில் ஒருங்கிணைந்த போலீஸ் வளாகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இது குறித்து, நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார் கூறுகையில், ''கால்நடைத் துறை அமைச்சரின் தொகுதியாக உள்ள அவிநாசியில், அனைத்து போலீஸ் பிரிவுகளும் ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில், போதிய வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த போலீஸ் வளாகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான இடத்தை விரைந்து தேர்வு செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us