/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் வெளி மாநில அரசுகளின் உதவி மையங்கள் மீண்டும் வருமா?
/
திருப்பூரில் வெளி மாநில அரசுகளின் உதவி மையங்கள் மீண்டும் வருமா?
திருப்பூரில் வெளி மாநில அரசுகளின் உதவி மையங்கள் மீண்டும் வருமா?
திருப்பூரில் வெளி மாநில அரசுகளின் உதவி மையங்கள் மீண்டும் வருமா?
ADDED : மே 29, 2025 12:42 AM

திருப்பூர் : திருப்பூரில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் நலன் கருதி, அந்தந்த மாநில அரசுகள் வாயிலாக உதவி மையங்கள் ஏற்படுத்த கோரிக்கை வலுத்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகளில், ஒடிஷா, பீஹார், ஜார்க்கண்ட், அசாம் உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த, 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
விழிப்புணர்வு
தங்கள் மாநில தொழிலாளர்களுக்காக ஒடிஷா மற்றும் பீஹார் அரசு உதவி மையங்கள் திருப்பூரில் திறக்கப்பட்டன. வேலை தேடி திருப்பூர் செல்வதற்கு முன், உதவி மையங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அவற்றின் வாயிலாக, அவசரமான தகவல்களை தங்கள் குடும்பத்துக்கு கூறுவதும், தங்கள் மாநில அரசு மற்றும் அதிகாரிகளிடம் பேசுவதும் தொழிலாளர்களுக்கு எளிதாக இருந்தது.
தாங்கள் சந்திக்கும் எவ்வித பிரச்னையாக இருந்தாலும், உதவி மையத்தை அணுகி தீர்வு பெற்றனர். கொரோனா தொற்றுக்கு பின், இந்த மையங்கள் மூடப்பட்டன.
எதிர்பார்ப்பு
நான்கு ஆண்டுகளாக, உதவி மையம் இல்லாததால், புதிதாக திருப்பூர் வரும் தொழிலாளர்கள் திக்கு தெரியாமல் தடுமாறுகின்றனர்.
சக நண்பர்களுடன் சேர்ந்து வந்தாலும், அந்தந்த மாநில மொழிகளில் பேசும் அலுவலர்களுடன், உதவி மையம் இருப்பது தான், தங்களுக்கு முழுமையான பாதுகாப்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
வெளிமாநில உதவி மையத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலர்கள் கூறுகையில், 'கொரோனாவின் போது, உதவி மையம் வாயிலாக தான், வடமாநில அரசுகள், தங்கள் மாநில மக்களை, பத்திரமாக திரும்ப அழைத்துக் கொண்டன. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையில் விண்ணப்பித்து, மானிய உதவியுடன், உதவி மையம் அமைக்கலாம்.
'தற்போதைய நிலவரப்படி, அசாம், ஜார்க்கண்ட் மாநில அரசுகள், திருப்பூரில் உதவி மையம் திறக்க மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன' என்றனர்.