/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடநெருக்கடியில் அரசுப்பள்ளி அரசின் உதவி கிடைக்குமா?
/
இடநெருக்கடியில் அரசுப்பள்ளி அரசின் உதவி கிடைக்குமா?
இடநெருக்கடியில் அரசுப்பள்ளி அரசின் உதவி கிடைக்குமா?
இடநெருக்கடியில் அரசுப்பள்ளி அரசின் உதவி கிடைக்குமா?
ADDED : செப் 25, 2025 12:23 AM
பொங்கலுார்: பொங்கலுார், பொல்லிக்காளிபாளையத்தில் அரசு துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை ஒரே இடத்தில் செயல்படுகிறது. இப்பள்ளி போக்குவரத்து வசதியுள்ள பகுதியில் அமைந்துள்ளதால் மாணவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை தொடர்ந்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி என ஒவ்வொரு காலகட்டத்திலும் பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. பள்ளிக்கு ஒரு ஏக்கர் நிலமே உள்ளது. தரம் உயர்த்தும் பொழுது போதுமான இட வசதியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நிலத்தை தர முன்வந்த கொடையாளர்களையும் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனால், இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்துக்கு கூட போதிய இடவசதி இல்லை. பொல்லிக்காளிபாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு நிலங்களை கண்டறிந்து, ஏதாவது ஒரு பள்ளியை இட மாற்றம் செய்தால் நெரிசல் குறையும்.
இது குறித்து, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர் கூறியதாவது:
இன்று ஒரு ஏக்கர் பல கோடி ரூபாய் விலை போகிறது. இதனால் தனியாரிடம் நிலம் தானமாக பெறுவது சிரமம். அரசு நிலத்தை கண்டறிந்து, பள்ளிக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தில், துவக்க பள்ளியை இடமாற்றம் செய்தால் வகுப்பறை கட்ட உதவி செய்வதற்கு பலர் ஆர்வமாக உள்ளனர். பள்ளியில் சேர ஆர்வமாக வரும் மாணவர்களை இடப்பற்றாக் குறையால் சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இடப்பற்றாக்குறையை போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.