ADDED : ஏப் 27, 2026 05:28 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி காணப்படுகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில் புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இதன் வழியாக, பழநி நோக்கி செல்லும், புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதி கிராமங்களுக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணியர் இங்கு வருகின்றனர்.
இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பயணியர் அச்சமடைகின்றனர். எனவே, இதை நகராட்சி அதிகாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
