தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நடமாடும் உளவியல் ஆலோசனை வாகன திட்டம் மீண்டும் வருமா?பள்ளி மாணவர்களுக்காக அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

நடமாடும் உளவியல் ஆலோசனை வாகன திட்டம் மீண்டும் வருமா?பள்ளி மாணவர்களுக்காக அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

நடமாடும் உளவியல் ஆலோசனை வாகன திட்டம் மீண்டும் வருமா?பள்ளி மாணவர்களுக்காக அதிகரிக்கும் எதிர்பார்ப்பு


UPDATED : ஜூலை 28, 2026 04:36 PM

ADDED : ஜூலை 28, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2026 04:36 PM ADDED : ஜூலை 28, 2026 04:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: தேர்வு பயத்தை தவிர்த்து, மன அழுத்தத்தை சமாளிக்க நடமாடும் உளவியல் ஆலோசனை வாகன திட்டத்தை, மீண்டும் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தி, கிராமப்புற பள்ளிகளுக்கு திட்டத்தில், முக்கியத்துவம் வழங்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசால், கடந்த 2013ல், பள்ளி மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாணவ, மாணவியரின் மனநலத்தை மேம்படுத்தி, பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டதால், திட்டத்துக்கு அதிக வரவேற்பு இருந்தது.

முதற்கட்டமாக, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில், நடமாடும் உளவியல் ஆலோசனை வாகன திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில், சிறப்பு பயிற்சி பெற்ற உளவியல் ஆலோசகர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட்டனர்.

மாவட்டத்துக்கு ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்யப்ப்டடு, அரசு பள்ளிகளுக்குச்சென்று, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளை வழங்கினர்.

மாணவர்களிடையே மனஅழுத்தம், தேர்வு பயம், இளமை பருவமாற்றங்களால் ஏற்படும் குழப்பங்கள், மொபைல்போன் அதிக பயன்பாட்டால் உருவாகும் மனநல பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளை ஆலோசகர்கள் கண்டறிந்து, அதற்கேற்ப வழிகாட்டுதல் வழங்கினர்.

பெருந்தொற்று காலத்தில், இத்திட்டம் நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகளுக்குப்பிறகும் மீண்டும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

பொதுத்தேர்வுக்கு தயாராகும் போது, குடும்பச்சூழல் மற்றும் இதர மன குழப்பங்கள், பிரச்னைகளை பகிர்ந்து கொள்ள தயங்குவது உள்ளிட்டவற்றால், மனரீதியாக சில பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

மனநல மேம்பாட்டில் கவனம் கல்வியாளர்கள் கூறியதாவது: தற்போதைய சூழலில் அனைத்து மாணவ, மாணவியரின் மனநல மேம்பாட்டில் கவனம் செலுத்துவது அவசியமாகியுள்ளது. தன்னம்பிக்கையை வளர்க்கவும், மன அழுத்தமின்றி தேர்வுகளை சந்திக்கவும், இத்தகைய ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.

கிராமப்புற பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் பிரச்னைகளை பள்ளிகளில் தெரிவிக்கவே தயங்குகின்றனர். மனநல ஆலோசனைகள் நேரடியாக மாணவ, மாணவியருக்கு வழங்கினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

எனவே தமிழக அரசு திருப்பூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், நடமாடும் உளவியல் ஆலோசனை வாகன திட்டத்தை செயல்படுத்தி, கிராமப்புற பள்ளிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us