/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கள்ளிப்பாளையம் சோதனைச்சாவடி மீண்டும் துவங்கப்படுமா?
/
கள்ளிப்பாளையம் சோதனைச்சாவடி மீண்டும் துவங்கப்படுமா?
கள்ளிப்பாளையம் சோதனைச்சாவடி மீண்டும் துவங்கப்படுமா?
கள்ளிப்பாளையம் சோதனைச்சாவடி மீண்டும் துவங்கப்படுமா?
ADDED : பிப் 16, 2024 12:40 AM
பொங்கலுார்;ரோடு விரிவாக்கத்தின் போது கள்ளிபாளையம் சோதனைச்சாவடி இடிக்கப்பட்டதால் திருட்டு அதிகரித்துள்ளது.
பல்லடம்-தாராபுரம் ரோடு, பொங்கலுார், கள்ளிப்பாளையத்தில், காமநாயக்கன் பாளையம் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட போது சோதனைச்சாவடி இடிக்கப்பட்டது. இதனால், போலீசாரின் கண்காணிப்பு பணி தொய்வடைந்துள்ளது.
இது திருடர்களுக்கு சாதகமாக மாறி உள்ளது. இதனால், அப்பகுதியில் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்ட துவங்கியுள்ளனர். விவசாய கிணறுகள், கள்ளிப்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான மின் மோட்டார் ஒயர்கள், தொழில் நிறுவனங்களின் ஒயர்கள் அதிக அளவில் திருட்டு போய் உள்ளது.
இதனால், விவசாயிகளுக்கும், ஊராட்சிக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கள்ளிப்பாளையம் சோதனைச்சாவடிக்கு விரைவில் புது கட்டடம் கட்ட வேண்டும். கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.