sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 நீர்த்தேக்க தொட்டிகளில் மீட்டர் பொருத்தப்படுமா?

/

 நீர்த்தேக்க தொட்டிகளில் மீட்டர் பொருத்தப்படுமா?

 நீர்த்தேக்க தொட்டிகளில் மீட்டர் பொருத்தப்படுமா?

 நீர்த்தேக்க தொட்டிகளில் மீட்டர் பொருத்தப்படுமா?


ADDED : டிச 19, 2025 06:42 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ. தலைவர் பிரதீப் சக்தி, பி.டி.ஓ.விடம் அளித்த மனு:

பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வினியோகிக்கப்படும் குடிநீர் அளவை கணக்கிட முடியாத சூழல் உள்ளது.

ஊராட்சிக்கு உட்பட்ட ஆறு கிராமங்களில், அடிக்கடி குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. ஊராட்சிக்கு உட்பட்டு, திருச்சி ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் நீருந்து அறையில் இருந்து மேற்கூறிய கிராமங்களுக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து, வெளியேற்றப்படும் குடிநீரின் அளவை கணக்கிட முடிவதில்லை. மேலும், எவ்வளவு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது என்பது குறித்த முறையான ஆவணங்களும் ஊராட்சியில் பின்பற்றப்படுவதில்லை. இது குறித்து, கிராமசபா கூட்டங்களில் பலமுறை விவாதித்தும் நடவடிக்கை இல்லை. இது முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாக உள்ளது.

எனவே, பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் மீட்டர் பொருத்த வேண்டும். கிராமங்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறித்து முறையான கையேடு பராமரிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us