sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலியோ சொட்டு மருந்து இந்தாண்டு வழங்கப்படுமா?

/

போலியோ சொட்டு மருந்து இந்தாண்டு வழங்கப்படுமா?

போலியோ சொட்டு மருந்து இந்தாண்டு வழங்கப்படுமா?

போலியோ சொட்டு மருந்து இந்தாண்டு வழங்கப்படுமா?


ADDED : ஏப் 18, 2025 06:46 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; போலியோ எனப்படும், இளம்பிள்ளை வாத நோயை குணப்படுத்த, பிறந்தது முதல் ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குழந்தைகள் உத்தேச எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்ட மையங்களில் சொட்டு மருந்து இருப்பு வைக்கப்படும். ஒரே நாளில் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கும் பணி என்பதால், மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறையுடன், மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, தன்னார்வலர்கள் இணைந்து சொட்டு மருந்து வழங்கும் பணி மேற்கொள்வர்.

வழக்கமாக ஏப்ரலில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். நடப்பாண்டு ஏப்ரல் மூன்றாவது வாரமும் முடிய உள்ள நிலையில், போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. நடப்பாண்டு சொட்டு மருந்து வழங்கப்படுமா என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நம் நாட்டில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக போலியோ பாதிப்பு இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக ஒரு தவணை போலியோ சொட்டு மருந்து மட்டும் வழங்கப்படுகிறது. தேதி அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us