sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ராஜவாய்க்கால் பள்ளம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படுமா? கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தால் பாதிப்பு 

/

ராஜவாய்க்கால் பள்ளம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படுமா? கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தால் பாதிப்பு 

ராஜவாய்க்கால் பள்ளம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படுமா? கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தால் பாதிப்பு 

ராஜவாய்க்கால் பள்ளம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படுமா? கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தால் பாதிப்பு 


ADDED : நவ 13, 2025 09:18 PM

Google News

ADDED : நவ 13, 2025 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: நகரின் அருகே, உப்பாறு ஓடைக்கு முக்கிய நீர்வரத்து அளிக்கும் ராஜவாய்க்கால் பள்ளம், ஆக்கிரமிப்புகளால் சுருங்கி, புதர் மண்டி காணாமல் போய் வருகிறது; பள்ளத்தை முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடுமலை நகர எல்லையில் அமைந்துள்ள ராஜவாய்க்கால் பள்ளம், முன்பு முக்கிய நீராதாரமாக இருந்தது. ஏழுகுள பாசன திட்டத்திலுள்ள ஒட்டுக்குளத்தின் உபரி நீரானது ராஜவாய்க்கால் பள்ளத்தில் செல்கிறது.

மேலும், பூலாங்கிணர், முக்கோணம் பகுதியிலிருந்து ஒரு ஓடை என, உடுமலையின் மேற்கு, தெற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் பெய்யும் மழை நீர் சிறு, சிறு ஓடைகளாக உருவாகி, கிழக்கு நோக்கி வந்து, ராஜவாய்க்காலில் சேர்கிறது. இந்த பள்ளத்துடன், தங்கம்மாள் ஓடை உள்ளிட்ட மழை நீர் ஓடைகள் இணைந்து உப்பாறு நோக்கிச்செல்கிறது.

முன்பு, ராஜவாய்க்கால், 19.8 மீட்டர் அகலமாகவும், தங்கம்மாள் ஓடை, 17 மீட்டர் அகலமாகவும் காணப்பட்டது. பின்னர், இரண்டும் இணைந்து, 57 மீட்டர் வரை அகலமான நீர் வழித்தடமாக இருந்துள்ளது.

தற்போது நகர எல்லையில், ராஜவாய்க்கால் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகளால் சுருங்கியுள்ளது. இரு கரைகளும் சரிந்துள்ளதால், அருகிலுள்ளவர்கள் பள்ளத்தின் நீரோட்ட பகுதியை ஆக்கிரமித்து, பாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடர்ச்சியாக செய்கின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் கட்டுமான கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பையை நேரடியாக ராஜவாய்க்கால் பள்ளத்தில் கொட்டுகின்றனர்.

விவசாயிகள் வலியுறுத்தல் வடகிழக்கு பருவமழை காலத்தில், பள்ளத்தில் செல்லும் குறைந்த தண்ணீரும், ஆங்காங்கே தடைபட்டு, சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது. புதர் மண்டி பள்ளம் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு உள்ளது. அதிக மழைப்பொழிவு இருந்தால், ராஜவாய்க்காலில் இருந்து தண்ணீர் திசைமாறி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பாதாளச்சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகும், தங்கம்மாள் ஓடை கழிவு நீர் சாக்கடையாகவே உள்ளது. இதனால், ராஜவாய்க்கால் பள்ளத்திலும் தண்ணீர் மாசடைந்துள்ளது. வழியோரத்திலுள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின், நிலத்தடி நீருக்கு ஆதாரமான பள்ளத்தை முழுமையாக மீட்க வேண்டும் என, நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடன் நேரடியாக மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. உப்பாறுக்கு நீர்வரத்து கொடுக்கும் ஒவ்வொரு ஓடையும் மறைந்து வருவதால், அப்பகுதி வறட்சி மிகுந்த பகுதியாக மாறி விட்டது. அதே போல், உடுமலை நகரை சுற்றியுள்ள ஓடை, பள்ளம் உள்ளிட்ட நீராதாரங்கள் அழிக்கப்பட்டு வருவது அத்தகைய நிலையை இங்கும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வருவாய்துறை வாயிலாக அளவீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்; பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக ராஜவாய்க்கால் பள்ளத்தை துார்வாரினால், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.






      Dinamalar
      Follow us