/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்டாலின் பயணத்திட்டம் 'ரோடு ஷோ' இருக்குமா?
/
ஸ்டாலின் பயணத்திட்டம் 'ரோடு ஷோ' இருக்குமா?
ADDED : ஆக 04, 2025 10:08 PM

திருப்பூர்; முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம், 22, 23 ஆகிய தேதிகளில் திருப்பூர் வருகை தருவதாக இருந்தது.
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட், வேலம் பாளையம் மருத்துவமனை வளாகம் ஆகியவற்றை திறந்து வைக்கும் வகையிலும், ரோடு ேஷா நடத்தி, பொதுமக்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்பின், 23ம் தேதி, உடுமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக மாவட்டம் முழுவதும் அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஆனால், முதல்வருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால், கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், முதல்வர் தனது வழக்கமான பணிகளைக் கவனிக்க துவங்கியுள்ளார்.
இதனால், கடந்த மாதம் ஒத்தி வைக்கப்பட்ட அவரது திருப்பூர் பயணத் திட்டம் எப்போது என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.,வினர் மத்தியில் எழுந்துள்ளது.
அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின், வரும் 11 அல்லது 12ம் தேதியில், திருப்பூர் மாவட்டம் வருகை தர வாய்ப்புள்ளது.
முந்தைய பயணத்திட்டத்தில் இருந்த இரு நாள் நிகழ்வுகளுக்குப் பதிலாக, உடுமலையில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மட்டும் நடைபெற வாய்ப்புள்ளது.
அதே விழாவில், காணொலி வாயிலாக பஸ் ஸ்டாண்ட் மற்றும் மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்கலாம். ரோடு ேஷாவுக்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம்.

