
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டு பகுதிகளில் பிரதானமாக ரோடு, குப்பை, கால்வாய் பிரச்னை உள்ளது.
இப்பிரச்னைக்கு இன்னும் முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. அவிநாசி ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகள் கவலைக்கிடமாக உள்ளது. அன்றாடம் குண்டும், குழியமான ரோடுகளில் அனைத்து விதமான அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளும் சென்று வருகின்றனர். இதுவரை தீர்வு ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
இதே போல, குப்பையும் பெரும் பிரச்னையாக உள்ளது. மாநகராட்சி உதயமாகி, 14 ஆண்டுகளுக்கு மேலாகியும், நிரந்தமான குப்பை கிடங்கு ஒன்று ஏற்படுத்தப்படாமல் உள்ளது. ஒவ்வொரு பகுதியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் குப்பை அகற்றப்படாமல், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
சாக்கடை கால்வாய், தெருவிளக்கு பிரச்னையும் உள்ளது. இதுபோன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு, நிரந்தமாக தீர்வுகாண வேண்டும்.

