தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?

ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?

ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?


ADDED : அக் 28, 2024 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பலரும் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் ஏராளமான வெளிநோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் உள்ளிட்டோர், பால், டீ, பிஸ்கட், ரொட்டி உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். நோயாளிகள், பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டி உள்ளது.

வாகனப் போக்குவரத்து, விபத்து அபாயத்துக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது சவாலானது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மருத்துவமனை வளாகத்தில், ஆவின் பாலகம் அமைக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us