தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் புதுப்பிக்கப்படுமா?

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் புதுப்பிக்கப்படுமா?

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் புதுப்பிக்கப்படுமா?


ADDED : செப் 17, 2025 08:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2025 08:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை; உடுமலை வட்டாரத்துக்கான, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ஒன்று முதல் நான்கு வயது வரை உள்ள குழந்தைகள் கல்வி பயிலும் வகையில், அங்கன்வாடி மையங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகின்றன. அவ்வகையில்,உடுமலை வட்டாரத்துக்கு உட்பட்ட, 136 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

அங்கன்வாடி மையங்களுக்கான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் கணக்கம்பாளையம் ஜீவா நகரில் உள்ளது.

இந்த அலுவலக கட்டடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. அக்கட்டடம் பாழடைந்து காணப்படுவதால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சர்தார் வீதியில் வாடகை கட்டடத்தில் இந்த அலுவலகம் செயல்படுகிறது.

இந்த சிதிலமடைந்த அலுவலக கட்டடத்தில், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பயன்படுத்திக்கொள்வதற்கான வாகனம் ஒன்றும், நிறுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு அதன் பயன்பாடும் முடங்கி விட்டது.

மலைகிராமங்களுக்குச்செல்வது, தொலைதுார கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு செல்வதற்கு, வாகன வசதியில்லாமல் மருத்துவ குழுவினருடனும், வாடகை வாகனங்கள் பிடித்தும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் செல்ல வேண்டியுள்ளது.

தற்போது, இந்த பயன்பாடில்லாத குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், குடிமகன்களுக்கு இளைப்பாரவும், பொழுதுபோக்குவதற்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்தை சுற்றிலும், மது அருந்திய பிளாஸ்டிக் டம்ளர்களும், பாட்டில்களும் மட்டுமே உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

சிதிலமடைந்து பயனில்லாமல் உள்ள கட்டடத்தை அகற்றி, புதிய அலுவலகம் அமைத்து தருவதற்கு சமூக நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கன்வாடி மையத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மாநில அரசும் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us