/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் மக்களின் கனவு நிறைவேறுமா?
/
பல்லடம் மக்களின் கனவு நிறைவேறுமா?
ADDED : டிச 29, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப ல்லடத்தில் கட்டமைப்பு வசதிகள் போதாது. விசைத்தறி காடா உற்பத்தி தொழில் மேம்பட, சோலார் மின் உற்பத்தி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இறந்த கோழிகளை அழிக்கும் நவீன எரியூட்டு கலம் அமைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பல்லடம் நகரப் பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, சமீபத்தில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட போதும், பல்லடத்தின் நெரிசல் குறைந்தபாடில்லை. புறவழிச் சாலை, மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட், ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட பல்லடத்தின் தேவைகள் நீள்கின்றன. நிறைவேற்றுவாரா முதல்வர்?

