ADDED : டிச 22, 2025 05:13 AM

அ நிறம் | அளவு
பொங்கலுார்: கொடுவாய் அய்யப்பன் கோவிலில் இருந்து சந்தை கடை வரை செல்லும் ரோடு உள்ளது. அந்த ரோட்டின் குறுக்காக பல இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது.
ஆனால், நீண்ட நாட்களாக தோண்டிய குழியை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
ரோட்டில் தோண்டிய குழியை மூட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
