/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் இருந்து விரைவு பஸ் இயக்கம்.. விரிவுபடுத்தப்படுமா?
/
திருப்பூரில் இருந்து விரைவு பஸ் இயக்கம்.. விரிவுபடுத்தப்படுமா?
திருப்பூரில் இருந்து விரைவு பஸ் இயக்கம்.. விரிவுபடுத்தப்படுமா?
திருப்பூரில் இருந்து விரைவு பஸ் இயக்கம்.. விரிவுபடுத்தப்படுமா?
ADDED : ஜூலை 15, 2025 12:06 AM

திருப்பூர்: பல மாவட்ட மக்களும் திருப்பூரில் வாழ்வதால், மயிலாடுதுறை, சிதம்பரம், நாகபட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட தொலை துார பகுதிகளுக்கும் விரைவு பஸ் இயக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
திருப்பூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், வேளாங்கண்ணி, நாகபட்டினம் மார்க்கமாக செல்ல நேரடி விரைவு போக்குவரத்து கழக பஸ் இல்லை. இதனால், கோவையில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணிக்க, திருப்பூர் மக்கள் பல்லடம் அல்லது காங்கயம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டியுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
மாவட்ட தலைநகராக திருப்பூர் உள்ள போதும், விரைவு போக்குவரத்து கழக பஸ் சேவை விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் மூன்று பஸ் ஸ்டாண்ட் இருந்தும், திருச்சி மார்க்கமாக எஸ்.இ.டி.சி., பஸ் புறப்பாடு இல்லை. மயிலாடுதுறை, சிதம்பரம், வேளாங்கண்ணி, நாகபட்டினம் உட்பட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் பணியாற்றுகின்றனர்.
வாரம் அல்லது மாதம் ஒருமுறை சொந்த ஊர் செல்வோர் போக்குவரத்து கழக பஸ்களில் இடம் கிடைக்காமல், விடியும் வரை அசவுகரியத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
கோவையில் இருந்து மயிலாடுதுறை, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூக்கு விரைவு போக்குவரத்து கழக பஸ் இயக்கப்படுகிறது. மாவட்ட தலைநகரான திருப்பூரில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்கினால், முன்பதிவு செய்து பயணிப்பவருக்கு உதவியாக இருக்கும். சிரமங்களும் குறையும். எனவே, இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.