/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்களூரு - கோவை எக்ஸ்பிரஸ் ஈரோடு வரை நீட்டிக்கப்படுமா?
/
மங்களூரு - கோவை எக்ஸ்பிரஸ் ஈரோடு வரை நீட்டிக்கப்படுமா?
மங்களூரு - கோவை எக்ஸ்பிரஸ் ஈரோடு வரை நீட்டிக்கப்படுமா?
மங்களூரு - கோவை எக்ஸ்பிரஸ் ஈரோடு வரை நீட்டிக்கப்படுமா?
ADDED : ஜூலை 12, 2025 12:55 AM
திருப்பூர்; தினமும் கோவையில் இருந்து மங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. காலை 7:50க்கு புறப்படும் ரயில், போத்தனுார் - பாலக்காடு, ெஷாரனுார், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு உட்பட, 47 ஸ்டேஷன்களில் நின்று மாலை, 6:00 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது.
மறுமார்க்கமாக, மங்களூருவில் இருந்து காலை, 9:00 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:16324), இரவு, 7:55க்கு கோவைக்கு வந்தடைகிறது.
இந்த ரயில் கோவையில் புறப்பட்டு கேரளா வழியாக பயணிப்பதுடன், பெரும்பாலான ஸ்டேஷன்களில் நின்று செல்வதால், 16 முன்பதிவில்லா பெட்டிகளை கொண்டிருப்பதால், பயணிகள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
சேலம் மற்றும் ஈரோட்டில் இருந்து திருப்பூர் வழியாக மங்களூருவுக்கு நேரடி ரயில் இயக்கம் இல்லை. வடமாநிலங்களில்இருந்து அல்லது சென்னையில் இருந்து வரும் ரயில்களில் தான் ஈரோடு, திருப்பூர் மக்கள் மங்களூரு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, சந்திரகாசி, கச்சிக்குடா, புதுச்சேரியில் இருந்து வரும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, இருக்கைகள் எப்போதும் நிரம்பி வழிகிறது. பயணிகள் பொது பெட்டியில் அமர்ந்து பயணிக்க முடியாத நிலை நீண்ட நாட்களாக உள்ளது.
மங்களூருவில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் (எண்:16324) ரயிலை திருப்பூர் வழியாக ஈரோடு வரை இயக்கினால், ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்கள் மங்களூரு பயணிக்க ஏதுவாக இருக்கும். சிரமங்களும் குறையும்.
ஈரோடு, திருப்பூரில் இருந்து மங்களூருவுக்கு சரக்குகளை முன்பதிவு செய்யவும் தொழில்துறையினருக்கு வசதியாக இருக்கும்.