ADDED : பிப் 28, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் சப் - கலெக்டரிடம், தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு செயலாளர் அப்புசாமி அளித்த மனு:
பெருமாநல்லுாரில், 1971 முதல் கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. வள்ளிபுரம், ஈட்டி வீரம்பாளையம், காவிலிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதி கால்நடை வளர்ப்பாளர், விவசாயிகள் மாடுகளுடன் வந்து செல்கின்றனர்.
இம்மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. வளாகம் முட்புதர்களுடன் காணப்படுகிறது. பழமையான கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தண்ணீர் தொட்டி பராமரிப்பு இல்லை. அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மருந்து, மாத்திரைகளை தேவைக்கேற்ப வழங்க வேண்டும். சமூக விரோத செயல்கள் நடக்கும் முன் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

