/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதார நிலையம் தரம் உயருமா? பெதப்பம்பட்டியில் எதிர்பார்ப்பு
/
சுகாதார நிலையம் தரம் உயருமா? பெதப்பம்பட்டியில் எதிர்பார்ப்பு
சுகாதார நிலையம் தரம் உயருமா? பெதப்பம்பட்டியில் எதிர்பார்ப்பு
சுகாதார நிலையம் தரம் உயருமா? பெதப்பம்பட்டியில் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 01, 2025 10:17 PM
உடுமலை; பெதப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், குடிமங்கலம் வட்டார சுகாதாரத்துறையின் கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றுப்பகுதியைச்சேர்ந்த, 25க்கும் அதிகமான கிராம மக்கள் இங்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதார நிலையத்துக்கு, அப்பகுதியை சேர்ந்தவர்களால், இடம் மற்றும் கட்டடம் தானமாக அளிக்கப்பட்டு, 1962ல், தாய்,சேய் நல விடுதி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது, நாளொன்றுக்கு, 200 பேர் வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த பழைய கட்டடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.
இருப்பினும், இரவு நேரங்களிலும், டாக்டர்கள் பணியில் இருக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.
கூடுதல் படுக்கை வசதி உள்ளிட்ட பிற கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தினால், சுற்றுப்பகுதியிலுள்ள, கிராம மக்கள் பயன்பெறுவார்கள். எனவே இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.