/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடை முழுநேரம் இயங்குமா? பணிக்கம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
/
ரேஷன் கடை முழுநேரம் இயங்குமா? பணிக்கம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
ரேஷன் கடை முழுநேரம் இயங்குமா? பணிக்கம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
ரேஷன் கடை முழுநேரம் இயங்குமா? பணிக்கம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 05, 2025 11:42 PM
பல்லடம்:
பணிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை, முழுநேரம் இயங்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், பணிக்கம்பட்டி, வேலப்பகவுண்டம்பாளையம், ரங்கசமுத்திரம், பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, 700க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பகுதி நேரமாக செயல்பட்டு வரும் இந்த ரேஷன் கடையை முழு நேரமாக மாற்ற வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் பல்லடம் கூட்டுறவு சங்க செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: ரேஷன் கடையில் அடிக்கடி கைரேகை சரிவர விழாமல், பொருட்கள் வாங்க முடியாமல் கார்டுதாரர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பகுதி நேரமாக மூன்று நாள் மட்டுமே செயல்படும் இந்த ரேஷன் கடையால், கார்டுதாரர்கள் பலர், கடைக்கு வருவதும், திரும்பிச் செல்வதுமாக அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும், பொருட்கள் வாங்குவதற்காக கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் மற்றும் வயதானவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. ரேஷன் கடையை முழுநேரம் ஆக்குவதால், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் தவிர்க்கப்படும். கைரேகை தடையின்றி விழவும், ரேஷன் கடையை முழுநேரம் செயல்பட வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.