/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுத்திகரிப்பு நிலையப்பணி குழப்பங்கள் நீங்குமா?
/
சுத்திகரிப்பு நிலையப்பணி குழப்பங்கள் நீங்குமா?
ADDED : ஜூன் 16, 2025 11:55 PM

பல்லடம், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, கலெக்டரிடம் வழங்கிய மனு:
பல்லடம் நகராட்சியில், கழிவுநீர், நீர் நிலைகளில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது; இதன் மூலம், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற பொதுமக்களின் தொடர் புகாரை தொடர்ந்து, பல்லடம் நகராட்சி நிர்வாகம், 11.52 கி.மீ., நீளத்துக்கு குழாய் பொருத்தி, மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், வடுகபாளையம் கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது; இதுதொடர்பாக, மக்களிடம் எவ்வித கருத்து கேட்பும் நடத்தப்படவில்லை.
இத்திட்டத்திற்கு, 13.97 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என, நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால், பொது தகவல் அலுவலர், 8.44 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்; திட்டத்தின் கீழ் குழாய் பதிக்க, பல்லடம், பச்சாபாளையத்தில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நகராட்சி நிர்வாகம், திட்ட வடிமைப்பை மாற்றியுள்ளது. இப்படி மாற்றியமைப்பதன் வாயிலாக, திட்டம் எந்தளவு வெற்றிகரமாக அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், கழிவுநீர் கொண்டு செல்லும் குழாயின் அகலமும் குறைவான அளவில் இருப்பதால், கழிவுநீர் செல்வதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு, இதுபோன்ற குழப்பங்களை தெளிவுப்படுத்த வேண்டும்.