ADDED : பிப் 17, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் அருகே மணியம்பாளையத்திலிருந்து சாணார்பாளையம் வரை உள்ள இணைப்பு சாலை சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இதில், ஒரு பர்லாங் மட்டும் விடுபட்டுள்ளது. அது குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த சாலை, முதலிபாளையம் - -அவிநாசிபாளையம் ரோட்டுடன், கொடுவாய்-- நாச்சிபாளையம் சாலையை இணைக்கிறது. குறுகிய துாரம் மட்டுமே விடுபட்டுள்ள அதனை புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.