UPDATED : அக் 24, 2026 10:47 PM
ADDED : அக் 24, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் பிரேமலதா, பொறுப்பு மேயரிடம் மனு அளித்தார்.
அதில், ஆத்துப்பாளையம் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்ட வேண்டும். ஆத்துப்பாளையம் மின் மயானம் செல்லும் சாலை, பெஸ்ட் கார்டன் சாலையில் இருந்து ஆத்துப்பாளையம் ரோடு வரை மற்றும் ஜூபிடர் கம்பெனி வீதியில் இருந்து சத்யா நகர் வரையிலான சாலைகள் சேதமடைந்துள்ளன. புதுப்பித்து தர வேண்டும் என கூறியிருந்தார்.
மனுவை பெற்ற பொறுப்பு மேயர் பாலசுப்பிரமணியம், ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
