/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலைப்பணியாளர் ஊதிய சங்கு அதிகாரிகளின் செவியை எட்டுமா?
/
சாலைப்பணியாளர் ஊதிய சங்கு அதிகாரிகளின் செவியை எட்டுமா?
சாலைப்பணியாளர் ஊதிய சங்கு அதிகாரிகளின் செவியை எட்டுமா?
சாலைப்பணியாளர் ஊதிய சங்கு அதிகாரிகளின் செவியை எட்டுமா?
ADDED : நவ 06, 2024 11:56 PM
திருப்பூர்; தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மண்டலம் சார்பில், திருப்பூர் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் சங்கொலி முழக்கப் போராட்டம் நடந்தது.
தாராபுரம் கோட்ட பொருளாளர் முருகசாமி, வரவேற்றார். சாலைப் பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்க்குரிய ஊதிய மாற்றம் அமல்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். கிராமப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்க கூடாது. சாலைப் பணியாளர்களுக்கு ஊதியத்தில், 10 சதவீதம் ஆபத்து படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போராட்டத்துக்கு, கோட்ட தலைவர்கள் வெங்கிடுசாமி (தாராபுரம்), கருப்பன் (திருப்பூர்), செவந்திலிங்கம் (கரூர்), செங்கோட்டையன் (ஈரோடு) ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராணி, போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.