/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஷொரனுார் - கோவை பாசஞ்சர் ஈரோடு வரை நீட்டிக்கப்படுமா?
/
ஷொரனுார் - கோவை பாசஞ்சர் ஈரோடு வரை நீட்டிக்கப்படுமா?
ஷொரனுார் - கோவை பாசஞ்சர் ஈரோடு வரை நீட்டிக்கப்படுமா?
ஷொரனுார் - கோவை பாசஞ்சர் ஈரோடு வரை நீட்டிக்கப்படுமா?
ADDED : அக் 28, 2025 01:17 AM
திருப்பூர்: 'ஷொரனுார் - கோவை பாசஞ்சர் ரயிலை, ஈரோடு வரை நீட்டிக்க வேண்டும்,' என, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
கேரளாவின் ஷொரனுாரில் இருந்து பாலக்காடு வழியாக கோவைக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது.மதியம், 2:50க்கு புறப்படும் ரயில், மாலை, 5:50க்கு கோவை வந்தடைகிறது. மறுநாள் காலை, 11:00க்கு கோவையில் புறப்பட்டு, மதியம், 2:30க்கு ஷொரனுார் செல்கிறது. கோவை - திருப்பூர் -ஈரோடு பாசஞ்சர் மாலை 6:10க்கு கோவையில் புறப்பட்டு விடுகிறது.
பின், கோவை - திருப்பூர் - ஈரோடு மாவட்டங்களில் உள்ள சிறிய ஸ்டேஷன்களில் நின்று செல்ல பாசஞ்சர் ரயில் இல்லை; அடுத்த ரயில் மறுநாள் தான்.
மாலை, 5:50 மணிக்கு கோவையில் பயணத்தை நிறைவு செய்யும் ஷொரனுார் பாசஞ்சர் ரயிலை ஈரோடு வரை நீட்டித்தால், இரவு திருப்பூர், ஈரோடு வந்து சேரும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஈரோடு -கோவை பாசஞ்சர், காலை, 7:50க்குஇயக்கப்படுகிறது. அதன்பின் மாலை, 5:10க்கு நாகர்கோவில் - கோவை பாஸ்ட் பாசஞ்சர் ரயில் தான் உள்ளது. காலை, 11:00க்கு கோவையில் இருந்து ஷொரனுாருக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, ஈரோடில் இருந்து புறப்படும் வகையில்இயக்கினால், மூன்று மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் இருமாநில பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். ரயில் பயணிகள் கூறுகையில்,'ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்துஆயிரக்கணக்கான தொழிலாளர் தினசரி ரயிலில் கோவை சென்று பணி முடிந்து திரும்புகின்றனர்.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இருப்பதால், சோமனுார், ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரயிலில் ஏறவோ இறங்கவோ முடியாது. திருப்பூர் அல்லது ஈரோடு சென்று மீண்டும் திரும்பி வர வேண்டியுள்ளது. பஸ்சில் பயணித்தால், இரண்டு பஸ் மாற வேண்டியுள்ளது. ெஷாரனுார் - கோவை பாசஞ்சர் ரயிலை ஈரோடு வரை சோதனை முறையில் நீட்டிப்பு செய்து ரயில்வே அதிகாரிகள் உதவ வேண்டும்,' என்றனர்.

