/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் நிகழ்ச்சியால் இடம் மாறுமா? மக்களை பாதிக்கும் மதுக்கடைகள்
/
முதல்வர் நிகழ்ச்சியால் இடம் மாறுமா? மக்களை பாதிக்கும் மதுக்கடைகள்
முதல்வர் நிகழ்ச்சியால் இடம் மாறுமா? மக்களை பாதிக்கும் மதுக்கடைகள்
முதல்வர் நிகழ்ச்சியால் இடம் மாறுமா? மக்களை பாதிக்கும் மதுக்கடைகள்
ADDED : ஜூலை 20, 2025 10:37 PM
உடுமலை; 'அரசு அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து நிறைந்த ரோட்டில், செயல்படும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளை இடம் மாற்ற பல ஆண்டுகளாக, மக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக முதல்வர் வருகையின் போதாவது மக்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடுமலை நகரம், பசுபதி வீதி, ராஜேந்திரா ரோட்டில், 'டாஸ்மாக்' மதுபான கடைகள் உள்ளன. கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் நிறைந்த பசுபதி வீதியிலும், ரயில்வே ஸ்டேஷன் அருகில், ராஜேந்திரா ரோட்டிலும், செயல்படும் இந்த மதுக்கடைகளால், பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இதனால், பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர் அவ்வழியாக செல்ல முடிவதில்லை. இது குறித்து தன்னார்வ அமைப்புகள் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு, பல முறை புகார் மனு அனுப்பினர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மக்கள் கூறுகையில், 'தமிழக முதல்வரின் உடுமலை நிகழ்ச்சிக்காக, நகரில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ரோட்டோர கடைகளை கூட அகற்றியுள்ளனர். அதோடு நீண்ட காலமாக மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளையும், அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.