நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன், அறநிலையத்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடித விவரம்:
கோவில்களில் 2015ம் ஆண்டு முதல், மாணவர்கள் பங்கேற்கும் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல் போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது. கொரோனா காரணமாக தொடர்ந்து நடக்கவில்லை. சில பகுதிகளில் மட்டும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.
எனவே, பாவை விழா போட்டிகளை மீண்டும் அறிவித்து நடத்த வேண்டும். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.