/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்திரப்பதிவு அலுவலகம் அமையுமா?
/
பத்திரப்பதிவு அலுவலகம் அமையுமா?
ADDED : நவ 24, 2024 11:58 PM

பொங்கலுார் ஒன்றியம் பரப்பளவில் பரந்து விரிந்தது. இங்கு உள்ள சொத்துகள் பல்லடத்திலும், திருப்பூரிலும் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. திருப்பூர் மற்றும் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகங்கள் எப்பொழுதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். பத்திரப்பதிவுத்துறை பொங்கலுார் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்க இடம் தேடி வருவதாக கூறப்படுகிறது.
பொங்கலுார் ஒன்றிய அலுவலகத்திற்கு, 3.42 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ''ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பழைய கட்டடத்தை போதிய பராமரிப்பு செய்தால் பத்திரப்பதிவு அலுவலகமாக பயன்படுத்த முடியும். பல்லடம் மற்றும் திருப்பூருக்கு அலைவதை தவிர்க்க முடியும்'' என்கின்றனர் பொதுமக்கள்.