/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் அமையுமா? நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
/
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் அமையுமா? நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் அமையுமா? நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் அமையுமா? நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : அக் 03, 2024 07:54 PM

உடுமலை:
உடுமலை -- கொழுமம் ரோடு ரயில்வே கேட்டில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலம் அமைக்க வேண்டும்.
உடுமலையிலிருந்து, கொழுமம் - பழநி வழித்தடத்தில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ரோடு, 18.80 கி.மீ., தொலைவுடையது. திருப்பூர் - திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் பிரதான வழித்தடமாகவும், உடுமலையிலிருந்து பழநிக்கு செல்ல மாற்றுப்பாதையாகவும் உள்ளது.
இந்த வழித்தடத்தில், உடுமலை நகரின் பிரதான குடியிருப்புகள், எஸ்.வி., புரம், கண்ணமநாயக்கனுார், மலையாண்டிகவுண்டனுார், உரல்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, குமரலிங்கம், கொழுமம், சங்கராமநல்லுார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கிராமங்கள் என, 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சுற்றுலா வாகனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளிலிருந்து பழநிக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களும் இந்த ரோட்டில் செல்கின்றன.
மேலும், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளதால், தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, பயணியர் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் பயன்படுத்தும் பிரதான வழித்தடமாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடாகவும் உள்ளது. இந்த ரோட்டில், நகர எல்லையில் அகல ரயில்பாதை அமைந்துள்ளது.
கோவை - திண்டுக்கல் ரயில்வே வழித்தடத்தில், அதிகளவு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், அந்நேரங்களில், ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால், இரு புறமும் வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கு நேர விரையம் அதிகரிக்கிறது.
எனவே, இந்த ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.