/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் தொழிலாளருக்கு தனி நல வாரியம் அமையுமா?
/
பனியன் தொழிலாளருக்கு தனி நல வாரியம் அமையுமா?
ADDED : பிப் 05, 2024 01:12 AM

திருப்பூர்;''பனியன் தொழிலாளருக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்'' என்று ஏ.ஐ.டி.யு.சி., பனியன் பேக்டரி யூனியன் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்க சிறப்பு பேரவை கூட்டம், திருப்பூர், ஊத்துக்குளி ரோடு அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொருளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். பனியன் சங்க துணை தலைவர் ரவி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொது செயலாளர் நடராஜன், பனியன் சங்க பொதுசெயலாளர் சேகர் உள்ளிட்டோர் பேசினர்.
திருப்பூர் பனியன் தொழிலாளர், வீட்டு வாடகையாக அதிகம் செலவிட வேண்டியுள்ளது. பனியன் தொழிலாளருக்கு அடுக்குமாடி வீடு கட்டி கொடுக்க வேண்டும். அடுக்குமாடி வீடு கட்டி கொடுக்கும் வரை, வாடகை படி வழங்க வேண்டும்.
பனியன் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீடு செய்து கொடுக்க வேண்டும்.
பனியன் தொழிலாளர் குழந்தைகள் தடையின்றி படித்து முன்னேற, கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். பனியன் தொழில் விரிவடைந்துள்ளதால், வீடு மற்றும் கடைகளில் சிறிய உற்பத்தி பிரிவுகள் இயங்குகின்றன. அங்குள்ள தொழிலாளருக்கு எவ்வித சமூக பாதுகாப்பும் கிடைப்பதில்லை. இத்தகைய தொழிலாளருக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் வகையில், தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
பனியன் தொழிலாளருக்கு அரசு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

