தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேங்காய் இருப்பா... விற்பனையா? குழப்பத்தில் விவசாயிகள்

தேங்காய் இருப்பா... விற்பனையா? குழப்பத்தில் விவசாயிகள்

தேங்காய் இருப்பா... விற்பனையா? குழப்பத்தில் விவசாயிகள்


UPDATED : அக் 11, 2026 06:09 PM

ADDED : அக் 11, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 06:09 PM ADDED : அக் 11, 2026 06:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: நிலையில்லாத விலை நிலவரத்தால், குழப்பத்திலுள்ள விவசாயிகள், தேங்காயை விற்பனை செய்யாமல், விளைநிலங்களில் இருப்பு வைக்கத்துவங்கியுள்ளனர். கொப்பரை விலை நிர்ணயத்தில் நிலவும் பிரச்னைக்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தென்னை விவசாயிகள் சந்தையில் எதிர்பார்த்த விலை கிடைக்காத நிலையில், தேங்காய்களை உடனடியாக விற்பனை செய்யாமல் இருப்பு வைத்து வருகின்றனர்.

கொப்பரை விலையில் ஏற்படும் மாற்றங்கள், எண்ணெய் ஆலைகளின் கொள்முதல் நிலவரம் உள்ளிட்ட காரணங்களால், தேங்காயை விற்பனை செய்வதா அல்லது மேலும் சில மாதங்கள் இருப்பு வைப்பதா என்ற குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர்.

கடந்தாண்டு டிச., ல், கொப்பரை கிலோ ரூ.200ஐ தாண்டி விற்பனையானது: இந்தாண்டு ஜூலையில் சுமார் ரூ.120 ஆக விலை சரிந்தது. தற்போது கொப்பரை விலை நிலையில்லாமல் நாள்தோறும் மாறி வருகிறது.

அதிகப்படியான கொப்பரை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலும், தனியார் குடோன்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், தேங்காய் கொள்முதலில் மந்தம் நிலவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் உற்பத்தி குறைந்த போதும், விலை அதிகரிக்காமல் இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

விலை நிலவரங்களை உன்னிப்பாக கவனிக்கும் விவசாயிகள், விலை உயர்ந்தால் மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இருப்பினும், தேங்காய்களை நீண்ட நாட்கள் இருப்பு வைப்பதால் ஏற்படும் எடை இழப்பு, தரம் குறைதல் மற்றும் சேமிப்புச் செலவுகளும் விவசாயிகளுக்கு சவாலாக உள்ளன.

எனவே, தேங்காய் மற்றும் கொப்பரைக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும், சந்தை விலை நிலவரங்களை வெளிப்படையாக அறிவிக்கவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us