தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மேம்பாலத்தில் ‘தட்’ ‘தட்’ சத்தம் சீரமைப்பு பணி நடக்குமா?

மேம்பாலத்தில் ‘தட்’ ‘தட்’ சத்தம் சீரமைப்பு பணி நடக்குமா?

மேம்பாலத்தில் ‘தட்’ ‘தட்’ சத்தம் சீரமைப்பு பணி நடக்குமா?


ADDED : செப் 28, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: தளி ரோடு மேம்பாலத்தில் சேதமடைந்துள்ள ஓடுதளத்தால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.

உடுமலை – தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம் அருகே, 26 துாண்களுடன், 650 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் 2013ல், பயன்பாட்டுக்கு வந்தது.

உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறு, மறையூர் உட்பட பகுதிகளுக்கும், திருமூர்த்திமலை, அமராவதி ஆகிய சுற்றுலா தலங்களுக்கும், இந்த மேம்பாலம் வழியாகவே அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தின் ஓடுதளத்தில், தொடர் பயன்பாடு உட்பட காரணங்களால், ஆங்காங்கே குழிகள் ஏற்படுகிறது.

இணைப்பு பகுதியிலும், கம்பிகள் வெளியே வந்துள்ளது. இணைப்பு பகுதியை கடக்கும் போது எழும் சத்தம், வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்துகிறது. குழி பெரிதாகும் போது, தடுப்பு சுவரும் சேதமடையும் அபாயம் உள்ளது.

எனவே, மேம்பாலம் முழுவதும், நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதனால், மேம்பாலத்தில் ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படும்; வாகன ஓட்டுநர்களும் அச்சமின்றி அவ்வழியாக பயணிக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us