ADDED : மே 08, 2026 04:03 AM
திருப்பூர்:கடந்த ஆண்டு 97.53 சதவீதத்துடன் மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்ற திருப்பூர் கல்வி மாவட்டம் நடப்பாண்டு பிளஸ் 2 தேர்ச்சியில் முதலிடம் பெற்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்கியது. மாவட்டத்தில், 26 ஆயிரத்து 408 பேர் தேர்வு எழுதினர். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி காலை 9:30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகிறது. கலெக்டர் மணிஷ் நாரணவரே, முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் தேர்ச்சி முடிவுகளை வெளியிடுவார்.பிளஸ் 2 தேர்ச்சியில், திருப்பூர் கடந்த 2019, 2020 மற்றும் 2024ம் ஆண்டு மாநிலத்தில் முதலிடம் பெற்று அசத்தியது. திருப்பூர் கல்வி மாவட்டம். நடப்பு பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்று அசத்துமா என்ற எதிர்பார்ப்பு மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த முறை மாநிலத்தில் மூன்றாம் இடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
