தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கடந்த தேர்தல்களில் வெற்றியாளர்கள்

 கடந்த தேர்தல்களில் வெற்றியாளர்கள்

 கடந்த தேர்தல்களில் வெற்றியாளர்கள்


ADDED : மார் 16, 2026 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், 2009 பிப்., 22ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையில், சட்டசபை தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டது; புதிய தொகுதிகளுக்கு, 2011ல் முதன் முதலாக தேர்தல் நடந்தது. புதிதாக உருவாகியிருந்த திருப்பூர் மாவட்டம், முதன்முறையாக சட்டசபை தேர்தலை, புதிய தொகுதிகளுடன் சந்தித்தது.

2011 சட்டசபை தேர்தல் கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க. ஆட்சி முடிந்திருந்தது. திருப்பூர் தொகுதி, திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு என்று பிரிந்திருந்தது. அப்போதைய தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஏழு தொகுதிகளிலும், மா.கம்யூ., வேட்பாளர் தங்கவேல், திருப்பூர் தெற்கிலும் வென்றனர். மாநில அளவில், திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிகபட்ச வித்யாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் வெற்றி பெற்றார்; அமைச்சராகவும் பணியாற்றினார்.

2016 சட்டசபை தேர்தல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. தி.மு.க., கூட்டணி இடையே போட்டி ஏற்பட்டது. அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கயம், உடுமலை தொகுதிகளில் அ.தி.மு.க., வென்றது.

அவிநாசியில் வென்ற தனபால் சபாநாயகரானார். காங்கயத்தில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கொங்கு இளைஞரணி தனியரசு வெற்றி பெற்றார். தாராபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் காளிமுத்துவும், மடத்துக்குளத்தில் தி.மு.க., வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.

2021 சட்டசபை தேர்தல் கடந்த சட்டசபை தேர்தல், கருணாநிதி - ஜெ., ஆகிய முக்கிய தலைவர்கள் இல்லாமல் நடந்தது. தி.மு.க., கூட்டணியும், அ.தி.மு.க., கூட்டணியும் மோதின.

இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்திருந்த சாமிநாதன், காங்கயத்தில் போட்டியிட்டு வென்றார்; மீண்டும் அமைச்சரானார். திருப்பூர் தெற்கு தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரனிடம் தோற்ற, செல்வராஜ் வெற்றி பெற்று, முதன் முதலாக எம்.எல்.ஏ., ஆனார்.

தாராபுரத்தில், அப்போதைய மாநில பா.ஜ., தலைவராக இருந்த முருகன் போட்டியிட்டார்; குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்; தி.மு.க., சார்பில் கயல்விழி வெற்றி பெற்றார்; அமைச்சரானார்.

திருப்பூர் மாவட்டம் உருவான பிறகு, நான்காவது சட்டசபை தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகள், த.வெ.க., - நா.த.க., கட்சிகள் போட்டியிட தயாராகி வருகின்றன. வரும் 30 ம் தேதிக்கு பிறகு, தேர்தல் பிரசாரத்தில் சூடுபறக்கப்போகிறது.

இதுவரை தேர்தலைசந்திக்காத புதிய வாக்காளர் சட்டசபை தேர்தலை முதன்முதலாக சந்திக்கும் வாக்காளர் உட்பட, வாக்காளர்கள், ஏப்., 23ல் ஓட்டளிக்கப் போகின்றனர். கூட்டணிகள் சார்பில் களமிறங்கும் வேட்பாளரின் செல்வாக்கு மற்றும் வாக்காளரின் ஆதரவின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளை யாரெல்லாம் தக்க வைக்கப்போகின்றனர்... யாரெல்லாம் கைப்பற்றுவார்கள்... என்பது, மே 4ம் தேதி தெரிந்துவிடும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us