/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வதங்கும் தென்னைகள்: வாடிய விவசாயிகள்
/
வதங்கும் தென்னைகள்: வாடிய விவசாயிகள்
ADDED : ஜூலை 13, 2025 12:36 AM

பொங்கலுார் : கடந்தாண்டு பெரும் வறட்சி நிலவியது. பி.ஏ.பி., யிலும் இரண்டு சுற்றோடு முதல் மண்டல பாசனம் நிறைவு பெற்றது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தென்னையை பிரதான பயிராக வளர்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டு விவசாயிகளே எதிர்பார்க்காத அளவு தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கிறது. ஆனால், குரும்பைகள் உதிர்ந்து பல இடங்களில் வெற்று மரங்களாக காட்சி அளிக்கிறது. எனவே விலை உயர்வின் பயனை அனைத்து விவசாயிகளாலும் அனுபவிக்க முடியாத நிலை உள்ளது.
கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சி, இந்த ஆண்டு இன்னும் பி.ஏ.பி., பாசனம் கிடைக்காதது போன்றவற்றால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மரங்கள் வாடி வதங்கி வருகின்றன. விவசாயிகள் பெரும் முயற்சி எடுத்து ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றியும் தென்னையை காப்பாற்ற போராடி வருகின்றனர்.
சில பகுதிகளை தவிர மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே பிரதானமாக கிடைக்கும். அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். அதுவரை என்ன செய்வது என்று புரியாமல் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.