/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் உதவித்தொகை வேண்டும்! குவியும் மனுக்களால் அதிகாரிகள் அதிர்ச்சி
/
மகளிர் உதவித்தொகை வேண்டும்! குவியும் மனுக்களால் அதிகாரிகள் அதிர்ச்சி
மகளிர் உதவித்தொகை வேண்டும்! குவியும் மனுக்களால் அதிகாரிகள் அதிர்ச்சி
மகளிர் உதவித்தொகை வேண்டும்! குவியும் மனுக்களால் அதிகாரிகள் அதிர்ச்சி
ADDED : ஜன 04, 2024 12:10 AM

திருப்பூர் : 'மக்களுடன் முதல்வர்' முகாமில், அரசின் மகளிர் உரிமை தொகை கேட்டு, அதிகளவில் விண்ணப்பங்கள் குவிவதால், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அவற்றை ஒட்டிய ஊராட்சிகளில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்து வருகிறது. இதில், வார்டு வாரியாக மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன.
வருவாய்த்துறை சார்ந்த வருமான சான்று, இருப்பிடம், ஜாதிச்சான்று உள்ளிட்ட ஆவணங்களை உடனுக்குடன் பெறும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாமில், பெண்களுக்கு அரசு வழங்கும், 1,000 ரூபாய் உதவித் தொகை கேட்டு ஏராளமானோர் மனு வழங்குகின்றனர். இந்த மனுக்களை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கியுள்ளனர்.
அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சிகளை பொறுத்தவரை மகளிர் உரிமைத் தொகை, புதிய குடிநீர் குழாய் இணைப்பு தொடர்பான மனுக்கள் அதிகளவில் வருகின்றனர். இதில் பெறப்படும் மனுக்களுக்கு, 30 நாளில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலையில், மகளிர் உரிமைத் தொகை என்பது, அரசின் கொள்கை முடிவு.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கென, அரசின் சார்பில் பிரத்யேக 'வெப்சைட் போர்டல்' வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த 'போர்டல்', பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால், குறிப்பிட்ட நாளுக்குள், இந்த மனுக்களுக்கு தீர்வு காண முடியுமா என்பது சந்தேகமே. இக்குழப்பத்தை உயரதிகாரிகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.