/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
/
காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
ADDED : ஏப் 16, 2025 10:56 PM

திருப்பூர்; திருப்பூர் அருகே மங்கலம் - சுல்தான்பேட்டை, ஆதிதிராவிடர் காலனியில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த, ஒன்றரை மாதமாக அப்பகுதிக்கு குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. குடிநீருக்காக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். குடிநீர் முறையாக வழங்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலை நேரம் என்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மங்கலம் போலீசார், வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். மக்களிடம் பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ., பேச்சுவார்த்தை நடத்தினர். ''இரு நாட்களுக்குள் இப்பிரச்னை தீர்க்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும்'' என்று உறுதியளித்தனர். சமாதானம் அடைந்த பெண்கள் கலைந்து சென்றனர். கோடைக்காலமாக உள்ளதால், குடிநீர் பிரச்னையில், ஊராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.