/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் கோலப் போட்டி ஆர்வம் காட்டிய பெண்கள்
/
பொங்கல் கோலப் போட்டி ஆர்வம் காட்டிய பெண்கள்
ADDED : ஜன 25, 2026 06:52 AM

திருப்பூர்: திருப்பூர், எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நல சங்கத்தில், பொங்கல் விழா கோலப்போட்டி நேற்று நடந்தது.
திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியில் உள்ள, எஸ்.ஆர். நகர் வடக்கு குடியிருப்போர் நல சங்கம் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக, பொங்கல் பண்டிகைக்கு பிறகு வரும் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, 9வது ஆண்டு பொங்கல் விழா கோலப்போட்டியுடன் நேற்று துவங்கியது. நவகிரஹ ரத்தின விநாயகர் கோவில் வீதியில், கோலப்போட்டி காலை, 8:00 மணிக்கு துவங்கியது. அப்பகுதியை சேர்ந்த பெண்கள், கோலப்போட்டியில் பங்கேற்று, புதிய வகையில் கோலமிட்டு அசத்தினர். குமரன் கல்லுாரி முன் உள்ள மைதானத்தில், இன்று காலை 7:00 மணி முதல் விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா நடக்கிறது.

