/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் தொழிலாளர் பாதுகாப்பு ஆலோசனை
/
பெண் தொழிலாளர் பாதுகாப்பு ஆலோசனை
ADDED : ஜன 29, 2024 11:52 PM
திருப்பூர்;தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சமூக நலத்துறை சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். சகி அமைப்பு துணை தலைவர் ஹாணம் ஜெயின், சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி முன்னிலை வகித்தனர்.
தொழிற்சாலைகளில், பணி புரியும் பெண்களுக்கு பணி செய்யும் இடத்தில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை அளிக்கப்பட்டது. பெண் ஊழியர்கள் புகார் தெரிவிக்க உதவி மையம் அமைத்தல்; அடிப்படை வசதிகள் உறுதி செய்தல், உள்ளக புகார் குழு அமைப்பு மற்றும் செயல்பாடு, குழுக்கள் கண்காணித்தல் மற்றும் திடீர் ஆய்வு நடத்துதல், மூன்று மாதத்துக்கு ஒருமுறை பயிலரங்கம் நடத்துதல் ஆகியன குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.