/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்த்தம் எடுத்து வந்து பெண்கள் வழிபாடு
/
தீர்த்தம் எடுத்து வந்து பெண்கள் வழிபாடு
ADDED : ஏப் 16, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கம்பம் போடுதல் நிகழ்ச்சிக்கு பின், வேப்பிலை, மஞ்சள் என, அம்மன் மனம் குளிரும் வகையில், உடுமலை நகரம் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள், குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்.
பாரம்பரிய இசை முழங்க, ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும், கிராமங்களிலிருந்தும்மக்கள், மாரியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்ததால், நகரமே திருவிழா கோலம்பூண்டது.
தினமும் பல ஆயிரக்கணக்கான பெண்கள், தீர்த்தம் கொண்டு வந்து திருக்கம்பத்திற்கும், அம்மனுக்கு ஊற்றி வழிபாடு செய்தனர்.