/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிற்காமல் சென்ற அரசு பஸ் பெண்கள் சரமாரி கேள்வி
/
நிற்காமல் சென்ற அரசு பஸ் பெண்கள் சரமாரி கேள்வி
ADDED : மே 29, 2025 12:51 AM
காங்கயம்,; கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் வளர்மதி, 51. நேற்று முன்தினம் காலை கரூரில் இருந்து கிளம்பி, காங்கயம், படியூரில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றார்.
அன்று மாலை, 5:00 மணிக்கு வளர்மதி, அவரது உறவினர் ஜோதிமணி ஆகியோர் காங்கயம் செல்ல பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தனர்.
காங்கயம் நோக்கி வந்த, 16 நம்பர் அரசு டவுன் பஸ்ஸில் (டி.என். 38 என் 2559) ஏற கைகாட்டி நிறுத்த முயன்றனர். ஆனால், டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் காங்கயம் சென்றார். இரு பெண்களும், 15 நிமிடத்திற்கு பிறகு பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் ஏறி, காங்கயம் வந்தனர்.
அப்போது, நிற்காமல் சென்ற பஸ் நின்றுள்ளதை பார்த்தனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரிடம் 'பெண்களுக்கு இலவசம் என்பதால் நிற்காமல் செல்வீர்களா?' என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு முறையிட்டனர். இதுதொடர்பாக, காங்கயம் போக்குவரத்து கிளையிலும் பெண்கள் புகார் அளித்து சென்றனர்.

