ADDED : மார் 12, 2026 04:47 AM

அ நிறம் | அளவு
காங்கயம் தொழில்நுட்ப கல்லுாரியில் சர்வதேச மகளிர் தினம் 'சகி - 26' விழா கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக விருக் ஷா இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகி ராஜலட்சுமி பங்கேற்று, மகளிர் கல்வி மற்றும் அதிகாரமளிப்பின் முக்கியத்துவம் குறித்தும், பொக்கிஷம் நிறுவனர் சங்கீதா பிரகாஷ் பங்கேற்று பெண்களின் வாழ்க்கை பயணத்தில் தன்னம்பிக்கை மற்றும் தொடர்ந்து கற்று கொள்ளும் மனப்பாங்கின் அவசியத்தை வலியுறுத்தியும் பேசினர். கல்லுாரி மகளிர் முன்னேற்ற மன்றம் சார்பில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன.
கல்லுாரி முதல்வர் ராம்குமார், மகளிர் முன்னேற்ற மன்றம் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி, கலைபிரியா மற்றும் மாணவி தலைவர் கனிஷா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
