/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கைவினைப்பொருட்களை சந்தைப்படுத்த ஊக்குவிக்கணும்! மகளிர் குழுவினர் அரசுக்கு வலியுறுத்தல்
/
கைவினைப்பொருட்களை சந்தைப்படுத்த ஊக்குவிக்கணும்! மகளிர் குழுவினர் அரசுக்கு வலியுறுத்தல்
கைவினைப்பொருட்களை சந்தைப்படுத்த ஊக்குவிக்கணும்! மகளிர் குழுவினர் அரசுக்கு வலியுறுத்தல்
கைவினைப்பொருட்களை சந்தைப்படுத்த ஊக்குவிக்கணும்! மகளிர் குழுவினர் அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : நவ 24, 2024 11:12 PM
உடுமலை; பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருள் தயாரிப்பதற்கு, மகளிர் குழுவினருக்கு அரசு ஊக்குவிக்க வேண்டுமென குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதரவற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு, வாழ்வாதாரத்துக்கான அடிப்படையை வழிகாட்ட, மகளிர் குழுக்கள், செயல்படுத்தப்படுகிறது. மகளிர் திட்டத்தின் சார்பில் மாவட்டம் தோறும், இவ்வாறு குழுக்கள் அமைக்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச்சேர்ந்த பெண்கள், உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
மகளிர் திட்டத்தின் தொகுப்பு வழிநடத்துநர்கள் வாயிலாக, குழுவினருக்கு, அவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகின்றனர்.வங்கிகளின் உதவியுடன் குழுவினருக்கு, சுயதொழில் துவங்குவதற்கான கடனுதவியும் வழங்கப்படுகிறது.
மகளிர் குழுவினருக்கு, பல வழிகளிலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அதில், ஐம்பது சதவீத பெண்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர்.
கல்வித்தகுதி இல்லாத பெண்களுக்கு, கைவினைப்பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளை திட்டம் வழங்குகிறது. ஆனால், பயிற்சிகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், அந்த பயிற்சியால் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த வழங்கப்படுவதில்லை.
மகளிர் குழுவினருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வருமானம் ஈட்டும் வகையில், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தவும், மாவட்ட அளவில், அங்காடிகள் துவக்கப்பட்டுள்ளன.
அங்காடிகளில் பத்து சதவீதம் மட்டுமே, இத்தகைய பொருட்கள் விற்பனை ஆகின்றன. கைவினைப்பொருட்கள் தயாரிப்பும், வெகுவாக குறைந்துவிட்டது.
உடுமலை ஒன்றியத்தில், மகளிர் திட்டத்தின் சார்பில் துவக்கப்பட்ட அங்காடி, முழுவதுமாகவே முடங்கி விட்டது.
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றுப்பொருளாக இருக்கும், பாக்குமட்டை, பனை ஓலை, மூங்கில் கூடைகள், உள்ளிட்ட பல்வேறு வகைகளிலிருந்து, பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பதற்கு, அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.
இப்பொருட்களை சந்தைப்படுத்தவும், செயல்பாடில்லாமல் உள்ள அங்காடிகளை மீண்டும் செயல்படுத்த, மகளிர் திட்டஅலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.