/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் கபடி; திருச்சி அணி வெற்றி
/
மகளிர் கபடி; திருச்சி அணி வெற்றி
ADDED : டிச 03, 2025 07:15 AM

அனுப்பர்பாளையம்: -திருப்பூர் வடக்கு மாவட்ட நெருப்பெரிச்சல் மண்டல பா.ஜ. சார்பில், பிரதமர் மோடி 75வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி பாண்டியன் நகரில் நடந்தது. முதல் இடத்தை திருச்சி தீபம் கல்வி அணியும், இரண்டாம் இடத்தை திருப்பூர் வி ஸ்போர்ட்ஸ் அணியும், மூன்றாம் இடத்தை உடுமலை கமலம் கல்லுாரி அணியும், நான்காம் இடத்தை பழனி பி.எஸ்.கே. அணியும் பெற்றன.
முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஆகியோர் பரிசு வழங்கினர்.

