/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் உரிமைத்தொகை; ஒரே நாளில் 2,491 விண்ணப்பம்
/
மகளிர் உரிமைத்தொகை; ஒரே நாளில் 2,491 விண்ணப்பம்
ADDED : ஜூலை 16, 2025 11:30 PM
திருப்பூர்; உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர். நேற்றுமுன்தினம் ஒரே நாளில், உரிமைத்தொகை கோரும் 2,491 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல் நாளான நேற்றுமுன்தினம், திருப்பூர் மாநகராட்சியின் 1, 9, 10வது வார்டுகளுக்கும் ஜெகா கார்டனில் உட்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் ஆறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன.
முதல்நாள் முகாமில், பொதுமக்களிடமிருந்து, பல்வேறு வகை சேவைகளுக்கான மொத்தம் 1,737 மனுக்கள் பெறப்பட்டன.
மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஏற்கனவே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதோர் உட்பட தகுதியான பெண்கள், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முகாம்களிலும், மகளிர் உரிமைத்தொகைகோரும் விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகாம்களில், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நேற்றுமுன்தினம் ஒரே நாளில், ஆறு இடங்களில் நடந்த முகாம்களிலும், மகளிர் உரிமைத்தொகைக்காக மட்டும், 2,491 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.