/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொற்கள் எண்ணங்களாகிறது... ஒரு சொல்! எண்ணங்களே செயலாகிறது!
/
சொற்கள் எண்ணங்களாகிறது... ஒரு சொல்! எண்ணங்களே செயலாகிறது!
சொற்கள் எண்ணங்களாகிறது... ஒரு சொல்! எண்ணங்களே செயலாகிறது!
சொற்கள் எண்ணங்களாகிறது... ஒரு சொல்! எண்ணங்களே செயலாகிறது!
ADDED : ஜன 22, 2024 12:45 AM

'ஒரு சொல் கொல்லும்... ஒரு சொல் வெல்லும்!' என்பது பெரியோரின் நல்வார்த்தை. ஒரு தவறான சொல், தனி நபரையோ, குடும்பத்தையோ சிதைக்கும் வலிமை கொண்டது. எனவே, நல்ல சொற்களையே நாளும் பேச வேண்டும்.
சொற்களின் வலிமை குறித்து, திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
'ஓம்' எனும் பிரணவத்தின் ஆதாரமான ஒரு சொல் கொண்டு, இந்த பிரபஞ்சத்தை படைக்கிறார் கடவுள். பல மூலிகையை உள்ளடக்கி, சிறு மாத்திரையை உருவாக்குவது போல், பல எண்ணங்களை உள்ளடக்கிய, ஒரு சொல்லால் ராமாயணத்தில் வெற்றி கண்டவர் ஸ்ரீஆஞ்சநேயர்.
அவர் சொன்ன. 'கண்டன் கற்பிரு கனியை' என்ற ஒற்றை சொல்லை கேட்ட மாத்திரத்தில், ஸ்ரீராமனுக்கு உயிர் வந்தது. அசோக வனத்தில் துன்பத்தின் உச்சத்தில் இருந்த சீதாதேவிக்கு, அனுமன் சொன்ன 'ஜெய் ஸ்ரீராம்' என்ற சொல், உயிர்கொடுத்தது.
அனுமனை கண்ட சீதாதேவி, 'இன்று என இருத்தி' என்று கூறிய ஒரு சொல் சிரஞ்சீவியாக வாழ செய்தது. ஸ்ரீராம் ஜெய்ராம் என்று, பாரதம் முழுவதும் ஒலிக்கும் 'ராம' மந்திரம், என்ற சொல், நன்மைகளையும், செல்வத்தையும் நாளும் நல்குகிறது. துன்பங்களையும், பாவங்களையும் சிதைந்து தேயச்செல்கிறது.
பாரத நாடு முழுவதும் பேதமற்ற தேசிய சிந்தனையை ஏற்பட செய்கிறது. வாய் உள்ளவர் எல்லாம், 'வாழ்க' எனும் சொல்லால் வாழ்த்த வேண்டுமென கவிச்சக்கரவர்த்தி கம்பன் கூறியிருக்கிறார்.
'அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங் கருணை'எனும், வள்ளலாரின் அருட்சொல், மனித குலத்தில் பசிப்பிணி போக்கி, சமர சுத்த சன்மார்க்கத்தை ஏற்படுத்தியது.
சிகாகோவில், விவேகானந்தர் துவங்கிய, 'சகோதர சகோதரிகளே' எனும் சொல், உலக அளவில் பாரத நாட்டின் பண்பாட்டை உயர்த்தி பிடித்தது. 'வந்தே மாதரம்' எனும் திலகரின் ஒரு சொல் இந்திய நாட்டு மக்களுக்கு சுதந்திர வேட்கையை விதைத்தது.
ஸ்ரீராமனின் ராமராஜ்ஜியம் எனும் சொல், ஒரு நல்ல அரசாட்சிக்கு அணிகல சொல்லாக விளங்குகிறது. ஸ்ரீராமனின் ஒரு சொல் அன்பை போதித்தது; அறத்தை நிலைநாட்டியது; ராமராஜ்யத்தை நிறுவியது. சொன்ன சொல்லில், உண்மையும், கொடுத்தவாக்கில் நாணயத்தையும், காப்பாற்றுவது மனிதருக்கு அழகு.
உலகம் வியக்க அயோத்தி ராமனின் ஆலயம், திறக்கப்படும் இந்த வேளையில் அறத்தின் வழிநின்று நாம் சொல்லும் சொல்லுக்கு ஏற்றம் தருபவர்களாக வாழ்ந்து காட்டுவதே ராமபிரானுக்கு நாம் செய்யும் சிறப்பு வழிபாடாகும்.