/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெரிசலை தவிர்க்க ரவுண்டானா சந்திப்பில் பணி நிறைவு
/
நெரிசலை தவிர்க்க ரவுண்டானா சந்திப்பில் பணி நிறைவு
ADDED : அக் 18, 2024 10:19 PM

உடுமலை : உடுமலையில் இருந்து திருமூர்த்திமலை, சின்னாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் ரோடு மாவட்ட முக்கிய பிரிவின் கீழ் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.
இதில், போடிபட்டி அருகே, வாளவாடி ரோடு சந்திப்பு பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, அப்பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு சந்திப்பு மேம்பாட்டு பணிகள், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறையால், கடந்தாண்டு துவக்கப்பட்டது.
விரிவாக்கத்துக்காக ரோட்டோரத்தில் மரங்கள் அகற்றப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் நிறைவு பெற்று, 'ரவுண்டானா' அமைக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'வாளவாடி சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். விரிவாக்கத்துக்கு அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, அப்பகுதியில், விரைவில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது,' என்றனர்.