/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பந்தல் காய்கறி உற்பத்திக்கு பணி தீவிரம் ; விலை நிர்ணயிக்க தேவை உதவி
/
பந்தல் காய்கறி உற்பத்திக்கு பணி தீவிரம் ; விலை நிர்ணயிக்க தேவை உதவி
பந்தல் காய்கறி உற்பத்திக்கு பணி தீவிரம் ; விலை நிர்ணயிக்க தேவை உதவி
பந்தல் காய்கறி உற்பத்திக்கு பணி தீவிரம் ; விலை நிர்ணயிக்க தேவை உதவி
ADDED : டிச 19, 2024 11:40 PM

உடுமலை; பருவமழைக்கு பிறகு, பந்தல் காய்கறி சாகுபடியை துவக்கும் வகையில், விளைநிலத்தை தயார்படுத்தும் பணிகளை, விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், விளைநிலங்களில் பந்தல் அமைத்து, பாகற்காய், பீர்க்கன், புடலை, கோவைக்காய் உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விளைநிலங்களில் பந்தல் அமைக்க, கற்கள் அமைத்து, கம்பி கட்டுதல், சொட்டு நீர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அதிக செலவாகிறது. இதனால், இச்சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் முன்பு தயக்கம் காட்டி வந்தனர்.
இதையடுத்து,பந்தல் சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியம் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியது. இதனால், மூன்று வட்டாரங்களிலும் தற்போது கணிசமான ஏக்கர் பரப்பில் பந்தல் காய்கறி உற்பத்தி நடைபெறுகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியதும், பந்தல் சாகுபடி விளைநிலங்களில் தண்ணீர் தேங்குதல்; நோய்த்தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால், பந்தல் காய்கறி உற்பத்தியும் பாதித்தது.
இதனால், சற்று இடைவெளி விட்டு, வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, சாகுபடியை துவக்கும் வகையில், விளைநிலங்களில் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
புதிதாக மேட்டுப்பாத்தி அமைத்தல், பழுதடைந்துள்ள கம்பிகளை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சீசன் சமயங்களில், பந்தல் காய்கறிக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, தோட்டக்கலைத்துறை வாயிலாக பந்தல் காய்கறி சாகுபடியாளர்களுக்கான உற்பத்தியாளர் குழுவை உருவாக்கி, விலை நிர்ணயம் செய்யும் நடைமுறையை கொண்டு வர அரசு உதவ வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.