/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோர மண் அரிப்பை தடுக்க பணிகள் தீவிரம்
/
ரோட்டோர மண் அரிப்பை தடுக்க பணிகள் தீவிரம்
ADDED : செப் 18, 2024 10:21 PM

உடுமலை: உடுமலை நகராட்சி பகுதிகளில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வரும் அக்., 2 வரை விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டோர மண் அரிப்பை தடுக்க மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கண்காணிப்பு பொறியாளர் நேற்று ஆய்வு செய்தார்.
உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த, அமராவதி அணை, திருமூர்த்திமலை மற்றும் மறையூர் ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மலையடிவாரத்தில், மழைக்காலங்களில், ரோட்டோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டுநர்கள் பாதிப்பது தொடர்கதையாக இருந்தது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டம் சார்பில், முதன்முறையாக திருமூர்த்திமலை ரோட்டில், ரோட்டோர மண் அரிப்பை தடுக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, ரோட்டில் இருந்து குறிப்பிட்ட துாரத்துக்கு வடிகால் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, நிரந்தர தீர்வு காண்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை நேற்று, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சரவணன் ஆய்வு செய்தார். இப்பணிகள் நிறைவு பெற்றால், திருமூர்த்திமலையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.