/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் ரயில்வே வழித்தடம் அமைக்கும் பணி தீவிரம்
/
கூடுதல் ரயில்வே வழித்தடம் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : நவ 09, 2025 11:09 PM

உடுமலை: உடுமலையில் கூடுதல் ரயில்வே வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திண்டுக்கல் - கோவை ரயில்வே வழித்தடத்தில், சென்னை, மதுரை, ராமேஸ்வரம், திருச்செந்துார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு, உடுமலை வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, இரு ரயில்வே தண்டவாளங்கள் உள்ள நிலையில், ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ரயில்கள் உடுமலை ஸ்டேஷனில் நின்று செல்லும் வகையிலும், பராமரிப்பு பணிக்கு வரும் ரயில்கள் நிறுத்தும் வகையில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகில், கொழுமம் ரோடு பகுதியில் கூடுதலாக ஒரு ரயில்வே வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக, தற்போதுள்ள ரயில்வே வழித்தடத்திற்கு அருகில், புதிதாக கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு, தற்போது தண்டவாளங்கள் அமைக்க, ஜல்லிகள் நிரப்பும் பணி நடந்து வருகிறது.
இதே போல், ஏற்கனவே உடுமலையில் செயல்பட்டு வந்த சரக்கு முனையம் முடங்கியுள்ளது. இதனால், உடுமலை பகுதியிலுள்ள, கோழித்தீவன ஆலைகள், காகித உற்பத்தி தொழிற்சாலைகள், நுால் மில்கள், காற்றாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், இயந்திரங்கள் கொண்டு வர முடியாமல், திருப்பூரிலிருந்து லாரிகளில் ஏற்றி கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், உற்பத்தி செய்த பொருட்களையும் ரயில்கள் வாயிலாக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது. எனவே, மீண்டும் சரக்கு முனையம் செயல்படும் வகையில், தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

